ஆசிரிய நன்மணி - விருது விழா! கருவூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் நடத்தியது!
கருவூர், மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆரியாஷ் உணவக கூட்ட அரங்கில் தலைவர் யோகா வையாபுரி தலைமையில் நடைபெற்றது.
ஜெயப்பிரகாஷ் செயல் அறிக்கை தாக்கல் செய்தார் மக்கள் தொடர்பு அலுவலர் மேலை பழநியப்பன் விழா நோக்க உரையாற்றினார்.
முதல் துணை ஆளுனர் மு. இமயவரம்பன் "ஆசிரியப்பணியின் சிறப்பினை" விளக்கி உரையாற்றி திருமதி கார்த்திகா லட்சுமி திரு லயன் ராமமூர்த்தி ஆகியோருக்கு "கல்விச்செம்மல்" விருதும், ஆசிரியர் பார்த்தசாரதி, லெட்சுமிநாராயணன் ஆகியோருக்கு "ஆசிரியர் முதுமணி" விருதும் ஆசிரியர்கள் செ.ரவிசங்கர், த.செல்வி, ஏ.சியாமளா, வ.சரவணன், தே. இரவிக்குமார், எம்.ரமேஷ்.ச முருகாம்பிகை, R. ஸ்ரீப் பிரியா, மா.அன்புச்செல்வி,PL.மீனா.சு.முத்துச்சாமி ஆகியோருக்கு வழங்கி உரையாற்றினார்.
அவைச் செயலர் சுமங்கலி செல்வராஜ் அவை துணைப்பொருளர் சிப்குமார், மண்டலத் தலைவர் நொய்யல் சண்முகம், வட்டாரத் தலைவர் கணேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்சி நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப.திருப்பதி, குளித்தலை அறிவுக்கண்ணன் சிறப்புரையாற்றினர்.
லயன் ராமசாமி, லயன் பூபதி, மனோகரன், வைஷ்ணவி மெய்யப்பன், அகல்யா மெய்யப்பன் சுப்ரமண்ய பாரதி வள்ளியப்பன், தியாகு உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலை பழநியப்பன் தொகுத்த ஆசிரியர் தின சிறப்பு மலரை துணை ஆளுனர் இமய வரம்பன் வெளியிட்டு டாக்டர் சுப.திருப்பதி பெற்றுக்கொண்டார்.
விருது பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரையுடனவிழா நிறைவுபெற்றது.