1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Six IPS officers transferred in Tamil Nadu

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

transfer
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் அவ்வப்போது ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் சற்றுமுன் தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் இதோ:
 
1. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
2. ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
3. சென்னை தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராக தீபக் சிவஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
4. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
5. வடக்கு மண்டல ஐஜியாக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
6. சென்னை போக்குவரத்து இணை கமிஷனராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
'ராகுல் காந்தியின் நடைப் பயணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' - பசவராஜ் பொம்மை