திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (19:19 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

kanimozhi stalin
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை அவரது சகோதரியும் திமுக எம்பியுமான கனிமொழி அவர்கள் இன்று சந்தித்து உள்ளார்
 
 மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அறிவிப்பு நேற்று வெளியானது
 
இதில் மக்களவை உறுப்பினர் 17 பேர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் 10 பேர்களை மத்திய அரசு நியமனம் செய்தது. இந்த குழுவின் தலைவராக திமுக எம்பி கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இதனை அடுத்து தனது சகோதரரும் முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களை கனிமொழி எம்பி சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
Edited by Siva