பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;
பெங்களூரில் இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பரவிய நிலையில் தற்போது குஜராத்திலும் ஒரு குழந்தைக்கு பரவி உள்ளதை அடுத்து இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
சீனாவின் சில மாநிலங்களில் எச்.எம்.பி.வி. என்ற வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீன மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் முழு சோதனையுடன் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் பெங்களூரில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் 8 மாத குழந்தைக்கு வைரஸ் பரவிய நிலையில் இன்னொரு குழந்தைக்கும் பரவியதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் குஜராத்தில் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் எச்.எம்.பி.வி. பாதிப்பு மூன்றாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் சில ஆண்டுகள் ஸ்தம்பிக்க வைத்த நிலையில் தற்போது எச்.எம்.பி.வி. வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
Edited by Siva