திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (18:34 IST)

அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை- கனிமொழி டுவீட்

kanimozi
மத்திய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஜிஎல்) CGL eன்ற தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில்  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல அறிவிப்புகளையும் திட்டங்களையும் அறிவித்து வரும் நிலையில், அண்மையின் மத்திய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படடும் CGL தேர்வுகள்  ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக பாராளுமன்ற எம்பி கனிமொழி தன் டுவிட்டர் பக்கத்தில், பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj