1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (16:28 IST)

என் சமூக வலைதள கணக்கை பெண்கள் பயன்படுத்தலாம் ... பிரதமர் மோடி ’டுவீட் ’

என் சமூக வலைதள கணக்கை பெண்கள் பயன்படுத்தலாம் ... பிரதமர் மோடி ’டுவீட் ’

பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, நம் நாட்டு பெண்கள் எனது சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கணக்கு வைத்துள்ளார். 
அவ்வப்போது, முக்கியமான கருத்துகளை, தேசம் சார்ந்த கருத்துகளையும், தனது சொந்த கருத்துகளையும் இதில் பதிவிட்டு வருகிறார். 
 
தற்போது பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை, 53.23 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். பேஸ்புக் பக்கத்தில்,44 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,35.2 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.
 
இந்நிலையில் வரும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது சமூக வலைதளக் கணக்குகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார். 
 
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : 
 
’இந்த பெண்கள் தினத்தில் எனது சமூக வலைதள கணக்குகளை பெண்களுக்கு கொடுக்கிறேன். அவர்களின் வாழ்க்கையும் தொழிலும் நமக்கு ஊக்கமளிக்கும்’ என தெரிவித்துள்ளார். 
 
மேலும், ’இது பல லட்ச மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும்’ . நீங்கள் பெண் என்றால், நீங்கள் சாதனை செய்யவுள்ள, ஊக்கமளிக்கக்கூடிய பெண் என்றால் நீங்கள் உங்களது கதைகளை #SheInspiresUs என்ற ஹேஸ்டேக்கில் பதிவு செய்யலாம் ’என தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடியின் இந்தப் பதிவுக்கு ஒரு லட்சத்துக்கு 77 ஆயிரம் லைக்குள் குவிந்துள்ளது. ஒரு லட்சம் பேர் இதுகுறித்து பேசிக் கொண்டுள்ளனர். 49 ஆயிரம் பேர் இதுகுறித்து ரீ டுவீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.