வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (16:12 IST)

பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட வெடிப்பொருட்கள்! – விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் இருப்பதாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு உற்பத்தில் தமிழகத்தில் உள்ள சிவகாசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்களுக்கு இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

முக்கியமாக சிலவகை வெடிப்பொருட்கள் பட்டாசுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி பட்டாசு நிறுவனங்கள் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை சிபிஐ இணை இயக்குனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.