பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம்: எம்எல்ஏவின் மகன், அவருடைய மனைவி மீது வழக்குப்பதிவு
வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ அவரது மனைவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திரு நறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி செல்வி.
வீரமணி 4 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு சென்று திரும்பவில்லை. இந்த நிலையில், செல்வி, சென்னையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு இடைத்தரகர் மூலம் 12 ஆம் வகுப்பு படித்து வந்த தன் மகள் ரேகாவை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
இந்த நிலையில், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி இருவரும், தனது குழந்தை அழும்போது, ரேகாவை அடித்து துன்புறுத்தியதுடன், மதிவாணன் சிகரெட்டால் சூடு வைத்து, தலைமுடியை வெட்டி துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிக்கைகுக்கு ரேகாவை, அவரது அம்மா வீட்டிற்கு அழைத்துள்ளார். எனவே இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
தனது கிராமத்திற்கு வந்த பின், உடலில் பல இடங்களில் காயமடைந்திருந்தால் ரேகா உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை மகளிர் போலீஸார், வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.