செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (10:33 IST)

சொத்து தகராறில் அண்ணனையேக் கடத்திய தங்கை… அதிமுக பிரமுகர் கைது!

சென்னையைச் சேர்ந்த வத்சலா என்ற அதிமுக வட்ட செயலாளர் தனது அண்ணனையே சொத்து தகராறில் கடத்தியுள்ளார்.

சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன். இவரின் தங்கையான வத்சலா அதிமுக கொளத்தூர் பகுதி 68 வது வட்ட செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். புருஷோத்தமனுக்கும் வத்சலாவுக்கும் தங்கள் பெற்றோரின் சொத்தான வீட்டைப் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக புருஷோத்தமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி புருஷோத்தமன் வேப்பேரி ரித்திடன் சாலை சந்திப்பில் ஆட்டோவில் சென்ற போது வத்சலா அடியாட்களோடு வந்து அவரை அடித்து கடத்திச் சென்றுள்ளார். அவரை ஆந்திராவுக்குக் கடத்திச் சென்ற நிலையில் அவர்களிடம் இருந்து தப்பி வந்த புருஷோத்தமன் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வத்சலா மற்றும் அவரின் கணவர் மற்றும் மகன் ஆகியோரை போலிஸார் கைது செய்துள்ளனர்.