திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (09:58 IST)

மாத சம்பளம் வாங்க, எக்ஸாம் எழுத... அனைத்திற்கு தடுப்பூசி கட்டாயம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல். 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
தற்போது தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும் ஆசியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தடுப்பூசிக்கு பிரச்சாரகர்களாக மாற வேண்டும். நோயற்ற புதுவையை உருவாக்க வேண்டும்.
 
கல்லூரி தொட ங்குவதற்கு 2 மாதங்கள் முன்பே ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி போட வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க நிரந்தர தீர்வு தடுப்பூசிதான். 
 
தடுப்பூசி போட்டால்தான் மாத ஊதியம் தரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். அதேபோல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.