ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (09:53 IST)

ஹரி & அருண் விஜய் படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் இப்போது இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் நடித்து வருகிறார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நாளை படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.