10 ஆவது வரை மட்டுமே படிப்பு… ஆனால் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து கல்லா கட்டிய பெண்!

Last Updated: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (18:06 IST)

திருச்சி மண்ணச்ச நல்லூர் பகுதியில் பெண்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி, சித்தாம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது திருமணம் ஆகாத பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது கர்ப்பப்பை நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்தது யார் என்ற விசாரணையில் மண்ணச்ச நல்லூரைச் சேர்ந்த ராஜலெட்சுமி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் 10 ஆவது மட்டுமே படித்துள்ளார். அதன் பின் பெண் மருத்துவர் ஒருவரிடம் 10 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அந்த மருத்துவர் வெளிநாடு சென்ற பின்னர் தானே கிளினிக் திறந்து இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகளை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :