செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:33 IST)

கொரொனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம்! ஆளுநர் ஒப்புதல்

சீனாவில் இருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளனது.

இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்., தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரொனா விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டவையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

மேலும் தொற்றுநோய்ச் சட்டத்தில் கொரோனா கால விதிமுறைகளை மீறுபவர்களுக்குப் புதிய சட்டம் பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சட்டம் விரைவில் தமிழகத்தில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியான் நிலையில்,  இந்தப் பொதுச் சுகாதாரத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இது கூடியவிரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.