ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (10:53 IST)

இன்னும் சில நாளில் திருமணம்… தூக்கில் தொங்கிய கல்யாண பெண் – இதுதான் காரணமா?

தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவருக்கு 3 குழந்தைகள். சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21) . இதில் இரண்டாவது மகளான விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சந்தன செல்வி எழுந்து அடுப்படிக்கு சென்ற போது அங்கு விஜயலட்சுமி புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான சந்தனலெட்சுமி அலறியடித்து வெளியே வந்து அழ ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கு கூடிய அக்கம்ப்பக்கத்தினர் விஜயலட்சுமியின் உடலை கீழே இறக்கியுள்ளனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை குறித்து தகவலறிந்த போலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். தனக்கு காது கேளாத பிரச்சனை இருந்ததால் திருமணம் வேண்டாம் என விஜயலட்சுமி சொல்லி வந்ததாகவும், ஆனால் பெற்றோரும் சகோதர சகோதரியும் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நெருங்கிய நிலையில் விஜயலட்சுமி இந்த முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.