திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (10:16 IST)

101 வயதில் மூன்று முறை கொரோனாவை வென்ற மூதாட்டி!

101 வயது பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மூன்று முறை முழுவதும் குணமாகியுள்ளார்.

உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரழந்துள்ளனர். கொரோனாவால் பெரும்பாலும் வயது அதிகமானவர்கள் நாள்பட்ட பிற நோய் இருந்தவர்களுமே அதிகமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயதான மரியா ஒர்சிங்கர் மூன்று முறை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அதிலிருந்து மீண்டுள்ளார். 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மரியா ஸ்பேனிஷ் காய்ச்சலையும் இதுபோல எதிர்கொண்டு பிழைத்து வந்தவர் என்பதால் அவரை அனைவரும் மரணத்தை வென்றவர் என புகழ ஆரம்பித்துள்ளனர்.