வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (10:48 IST)

கர்ப்பமானக் காதலியை ஏமாற்றிய இளைஞர் – தற்கொலையில் முடிந்த விபரீதம்

காதலி கர்ப்பத்தைக் கலைக்க சொல்லிவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள திட்டம் தீட்டிய வாலிபரால் காதலி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் பகுதியில் வசித்து வந்தவர் நந்தினி. கல்லூரி மாணவியான இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த உள்ள தினேஷ் என்ற இளைஞரோடுப் பழக ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்குயிராகக் காதலித்ததை அடுத்து வீட்டுக்குத் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர்.

இதனால் இருவரும் எல்லை மீற கடைசியில் நந்தினி கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாகியுள்ளார். இந்தப் பிரச்சனையைத் தெரிந்துகொனட தினேஷ் இது வெளியே தெரிந்தால் இரு குடும்பத்தாருக்கும் அசிங்கம்; அதனால் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என நந்தினிக்கு வாக்குறுதி அளித்துள்ளார். தினேஷின் பேச்சை நம்பிய நந்தினி கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு தினேஷின் நடவடிக்கைகள் மாறியுள்ளன. நந்தினியோடு பழகுவதை வெகுவாகக் குறைத்துள்ளார். அவர் போன் செய்தாலும் எடுக்காமல் இருந்துள்ளார். ஒரு நாள் திடீரென்று நந்தினியை அழைத்த தினேஷ் தனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாக சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் விளைவாக கடந்த 19 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தனது தற்கொலைக்குக் காரணம் தினேஷ்தான் என்றும் ’என்னை ஏமாற்றிய அவன் உயிரோடு நரக வேதனை அனுபவிக்க வேண்டும்’ என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.