தன் காதலியை மணந்த நியூஸிலாந்து கேப்டன் கர்ப்பம்? – குழப்பத்தில் ரசிகர்கள்

cricket
Last Modified புதன், 21 ஆகஸ்ட் 2019 (14:04 IST)
தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நியூஸிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கர்ப்பமாகியுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நியூஸிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எமி சட்டர்வொயிட். நியூஸிலாந்து அணியில் 12 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் இதுவரை 119 ஒருநாள் போட்டிகள், 99 டி20 போட்டிகள் விளையாடி சாதனை படைத்தவர். பெண்களுக்கான ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் வீழ்த்திய சாதனையை படைத்தவரும் இவரே!

கேப்டன் சட்டர்வொயிட் தன்னுடைய அணியில் விளையாடிய சக வீராங்கனையான லியாவுடன் தன்பாலின காதலில் இருந்துள்ளார். பல காலமாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சட்டர்வொயிட். அதில் அவர் “அடுத்த ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் சட்டர்வொயிட் கர்ப்பமாக இருப்பதால் ஆஸ்திரேலியா செல்லும் அணியில் அவர் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்பாலின காதலில் உள்ள சட்டர்வொயிட் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்திருப்பது ரசிகர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது. எனினும் கர்ப்பம் குறித்த காரணம் எதையும் சட்டர்வொயிட் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :