திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:08 IST)

மீண்டுமொரு காதல் - கடுப்பாகி ட்ரோல் செய்யும் ஆர்மிஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் மீண்டும் கவின் லொசலியாவின் காதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.


 
கவின் ஆரம்பத்தில் அபிராமியுடன் வழிந்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை கழட்டி விட்டு விட்டு சாக்ஷியிடம், நீ என்னுடைய மனைவியாவதற்கு சில விஷயங்களில் ஒத்துப்போகிறாய் என்று கூறி சாக்ஷியை காதல் வலையில் விழவைத்தார். அதையடுத்து லொஸ்லியாவுடன் இரவு பகல் பாராமல் பேசிவந்த கவின் நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம் என்று கூறிவந்தார். ஆனால் தற்போது லொஸ்லியாவுடனும் ரொமான்ஸ் செய்துகொண்டிருக்கிறார். 
 
பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு அப்பப்போ வந்து பேசுறாங்க..என்ன சமாதானம் பண்ணபோறீங்கள் கம்முன்னு தான இருக்கப்போறீங்க என்று கூற அதற்கு வெட்கப்பட்டு லொஸ்லியா முகத்தை மூடிக்கொள்கிறார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் "இந்த ஆரம்பிச்சுட்டான்டா அடுத்த காதல்" யப்பா விஜய் டிவி இந்த கன்றாவி காதல் கூட பரவாயில்லை ஆனால், நீங்க போடுற BGM தான் உசுர எடுக்குது" என கடுப்பாகியுள்ளனர்.