1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (10:11 IST)

சொந்த மண்ணில் விஜயகாந்திற்கு சிலை வைக்கப்படுமா?.. மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

dmdk request
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 
தமிழ் திரைத்துறை நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்
நல குறைவால் காலமானார். மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்திற்கும் மதுரைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. 
 
விஜயகாந்த்க்கு மதுரையில் வெங்கல சிலை வைக்க வேண்டுமென விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள், மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்தின் முழு உருவ சிலையை மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில்  அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.