புதுக்கணவன் தொல்லை - தற்கொலை செய்துகொண்ட 4 மாத கர்ப்பிணி!
காட்டுமன்னார்குடி அருகே குடிகாரக் கணவனின் தொல்லையால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள குறுங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜாசெந்தூரன் - செல்வசுந்தரி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதையடுத்து சில தன் கணவர் ஒருக் குடி அடிமை எனத் தெரிந்த செல்வசுந்தரி அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனை அடுத்து அவரிடம் குடியை விடுமாறு பல முறை சண்டையிட்டுள்ளார். ஆனால் நாளுக்கு நாள் ராஜாசெந்தூரானின் குடிப்பழக்கம் அதிகமாவதோடு மட்டுமல்லாமல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு தொல்லைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் மனமுடைந்த செல்வசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் நான்கு மாதக் கர்ப்பமாக இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தங்கள் பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு ராஜா செந்தூரான் தற்கொலைப் போல் நாடகமாடுவதாக பெண்ணின் பெற்றோர் கூற போலிஸார் தலைமறைவாகியுள்ள அவரைத் தேடும் பணியில் உள்ளனர்.