கேடுகெட்ட கணவனின் காம கொடூர நண்பர்கள்: மனைவியை அடமானம் வைத்து சூது...
மனைவி அடமானம் வைத்து சூது ஆடி தோற்றதால் மனைவியை பலாத்காரம் செய்ய நண்பர்களுக்கு அனுமதி கொடுத்த கணவனுக்கு போலீஸார் வலை வீசி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் ஜான்புர் மாவட்டத்தில் உள்ள ஜஃபாராபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒரு தினமும் குடிக்கும் பழக்கத்தை கொண்டவர். குடித்துவிட்டு நண்பர்களுடன் வீட்டில் உட்கார்ந்து சூது விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்துள்ளார்.
இதேபோல் சம்பவ தினத்தன்று போதையில் மனைவியை அடமானம் வைத்து சூதாடியுள்ளார். அப்போது தோற்றுவிட்டதால் மனைவில் பலாத்காரம் செய்ய நண்பர்களுக்கு அனுமதியும் கொடுத்துள்ளார். நண்பர்களும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள். இது நடந்து சில தினங்களுக்கு பின்னர் மனவியிடம் மன்னிப்பு கேட்டு அழைத்து சென்றுள்ளான். ஆனால், மீண்டும் தனது மனைவியை நண்பர்களுக்கு இரையாக்கியுள்ளான்.
இந்த முறை பொருமையை இழந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தெரிந்துக்கொண்ட நண்பர்களும் கணவனும் தலைமறைவாகியுள்ளனர். போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.