புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:38 IST)

திருமணமாகி 20 நாளில் கணவனை கொன்ற காதல் மனைவி !

திண்டிவனத்தில் திருமணமாகி 20 நாட்களுக்குள் காதல் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் தில்லையடி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்தவர் சேதுபதி.அதேபகுதியைச் சேந்த முருகவேணி என்ற பெண்ணை காதலித்து 20 நாட்களுக்குள் திருமணம் செய்துகொண்டார்.
 
இந்நிலையில் திருமணமானது முதல் காதல் மனைவி மீது சந்தேகம் கொண்டுள்ளார் சேதுபதி. இதனால் தினமும் மது அருந்திவிட்டு வந்து முருவவேணியை அடித்ததாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் சேதுபதியை கொலை செய்ய அவருடை மனைவி திட்டமிட்டுள்ளார். நேற்று மதியம் சேதுபதி வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்கு வெளியெ சென்ற முருகவேணி, கதபை வெளிப்புறம் தாழிட்டு வீட்டுக்கு தீவைத்துவிட்டார். இதில் குடிசை வீடு எரிந்தது..உள்ளே சிக்கிக்கொண்ட சேதுபதி உடல்கருதி பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் தீயை அணைத்தனர்.இதுகுறித்து போலீஸார் முருகவேணியிடன் விசாரித்த போது, அனைத்து விவரங்களையும் கூறி, போலீஸாரிடம் சரணடைந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.