வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (13:23 IST)

"ஆமா அப்படித்தான் பேசுவேன் என்ன பண்ணுவ" ரணகளமான பிக்பாஸ் வீட்டின் சண்டை!

பிக்பாஸ் வீட்டில் சேரன் சரவணனின் சண்டை இன்று அடுத்தடுத்த ப்ரோமோவில் ரணகளமாக வெடித்துள்ளது. 


 
சரவணன் நீண்டகால பகையை ஒரே அடியாக தீர்த்து கொள்ளும் விதத்தில் சேரனிடம் மோசமாக வம்பிழுத்து  சண்டையிடுகிறார். இந்த ப்ரோமோவில் அவரு லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு நீ அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்குற என சாண்டியிடம் கேட்டு மீண்டும் சண்டையிடுகிறார். இதனால் கடுப்பான சேரன் எதிர்த்து சில கேள்விகளை கேட்கிறார். ஆனாலும் சரவணன் அப்படிதான் பேசுவேன் என அடங்காபிடாரியாக வம்பிழுக்கிறார். 
 
சரவணன் சேரனை லூசுன்னு திட்டியதும் தர்ஷன் எதிர்த்து " அவர் அவரோட கருத்தை சொன்னார். அதுக்கு எதுக்கு லூசுன்னு கேக்குறீங்க என கேட்டு சரவணனை திட்டுகிறார். இந்த பிரச்னையால் சரவணனின் உண்மை முகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதை கண்டு ஷாக்கான நெட்டிசன்ஸ் சரவணனை இந்த வாரம் தூக்கி வெளியில் போடவேண்டும் என கூறிவருகின்றனர்.