முதல் திருமண நாளை எங்கே கொண்டாடுவது… கணவன் மனைவி தகராறில் போன உயிர்!

Last Updated: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (09:01 IST)

கணவன் மனைவிக்கு இடையே முதல் திருமண நாளை எங்கே கொண்டாடுவது என்ற பிரச்சனை எழுந்த நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கங்கா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் மற்றும் சந்தியாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் தங்கள் முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைத்த சுரேஷ், தன் தாயார் வீட்டுக்கு சென்று கொண்டாடலாம் என மனைவியிடம் சொல்லியுள்ளார்.

ஆனால் மனைவியோ செலவுக்குப் பயந்து திருமண நாள் கொண்டாட்டம் வேண்டாம் என சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரேஷ் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். பிறகு கோபம் குறைந்து மாலை மனைவிக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை. அதனால் தனது தாயாரைப் போய் வீட்டில் பார்க்க சொல்லியுள்ளார்.

அங்கு அவர் சென்று பார்த்தபோது சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :