வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (20:27 IST)

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,519 பேர் கொரொனாவால் பாதிப்பு ! 77 பேர் பலி

கொரொனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் கொரொனா தொற்றின் பாதிப்புகள் குறைந்தபாடில்லை.  இன்று தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 5,519 பேர் பாதிக்கப்பட்டனர். எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆகும். எனவே இதுவரை 8,231 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,006 ஆகும். மொத்தமாக 4,35,422 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மேலும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். இதனால் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 1,46, 593 ஆக அதிகரித்துள்ளது. #tamilnaducoronoupdate