சிவ பூஜையில் புகுந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து வெளுத்த மனைவி


Abimukatheesh| Last Updated: புதன், 21 ஜூன் 2017 (16:17 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவர் மீது மனைவி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

 
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி செல்விக்கு விளாம்பட்டியைச் சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் செல்வி வீட்டில் கள்ளக்காதலுடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
அந்த நேரத்தில் செல்வியின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் இருந்த நிலையை பார்த்த ரவிச்சந்திரன் அதிர்ச்சியடைந்துள்ளார். கணவர் தான் உல்லாசமாக இருப்பதை கண்ட செல்வி தனது கள்ளக்காதலுடன் இணைந்து தனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
 
இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :