1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Why Vaiko not speak about Jayalitha photo in Assembly?

ஜெயலலிதா உருவப்படம் குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?

jayalaitha
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்பது தமிழக மக்கள் அறிந்ததே.

ஆனால் நேற்று சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கருத்து கூறிவிட்ட நிலையில் வைகோ மட்டும் இன்னும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை

நேற்று செய்தியாளர்கள் வைகோவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, 'கவிஞர் குடியரசு நினைவு தினம் என்பதால் வேறு எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று நழுவினார். ஆனால் இன்றும் அவர் இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார்.

திமுகவுடன் கூட்டு, ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று கூறி வரும் வைகோ, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் பேசாமல் இருப்பது அவர் குழப்பவாதியா? அல்லது தந்திரக்காரரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
பிரபல ரவுடி பினு காவல் நிலையத்தில் சரணடைந்தார்...