1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (07:37 IST)

டி.கே.எஸ் இளங்கோவன் பதவி இழந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

டி.கே.எஸ் இளங்கோவன் பதவி இழந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்
திமுக அமைப்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ் இளங்கோவன் நேற்று இரவு திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற விபரத்தை திமுக தலைமை அறிவிக்காததால் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ஜான்விஜய், டி.கே.எஸ் இளங்கோவனின் மாமனார் என்றும், சமீபத்தில் ஜான்விஜய் மீது 'மீ டூ' குற்றச்சாட்டு எழுந்ததால் டி.கே.எஸ் இளங்கோவன் பதவி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சோனியா காந்தியின் சென்னை வருகையை தலைமையின் அனுமதியின்றி அறிவிப்பு செய்ததற்காக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

டி.கே.எஸ் இளங்கோவன் பதவி இழந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்
எனவே தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, திமுக தலைமையே என்ன காரணத்திற்காக டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டார் என்பதை விளக்க வேண்டும் என திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.