வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 மார்ச் 2018 (14:12 IST)

படம் மட்டும் பெற்றோர் பணத்தில் பார்க்க வேண்டுமா? சந்தர்ப்பவாத ரஜினி: சீமான் விளாசல்

மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் ரஜினி, பெற்றோர் கொடுக்கும் பணத்தில் படம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். படிக்கும் வயதில் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினார். செய்தியாளர்களை சந்தித்த சீமான் இதுகுறித்து கூறியதாவது:-
 
ரஜினி சொல்வது போல் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ரஜினியின் அணுகுமுறை, அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாம்னு காத்திருந்தது போல இருக்கு. 
 
மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றால் வேறு யார் வந்து அரசியல் செய்வது. பெற்றோர் கஷ்டப்பட்டு பணத்தை கொடுத்து படிக்க அனுப்புகிறார்கள். படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ரஜினி சொல்கிறார். பெற்றோர் படிக்கத் தானே பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். அந்த பணத்தில் என் படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.