வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (10:45 IST)

ரஜினியின் இமயமலை பயணம் ; ஆன்மீக சாமி மலையேறி விட்டது : ஜெயக்குமார் கிண்டல்

நடிகர் ரஜினிகாந்த்தின் இமயமலை பயணத்தை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். ஆனால், உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடமால், அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்.அதன் பின் சமீபத்தில் சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு பற்றி மனம் திறந்து பேசினார். 
 
அந்நிலையில், நேற்று திடீரென அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். இது அவரது ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில், இன்று விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதும், ரஜினியின் ஆன்மீக பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “ஆன்மீக சாமி மலையேறி விட்டார்” என கிண்டலாக சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.