வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (16:10 IST)

+2 தேர்வு எழுத வந்த மாணவரின் விரல்களை துண்டாக்கிய சக மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்களின் வெறிச்செயல் அதிகரித்து வருகிறது. ரயிலில் கத்திக்குத்து, மாணவி கத்தி குத்தால் கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மதுரை அருகே +2 மாணவர் ஒருவரின் கைவிரல்களை அவரது சகமாணவர்கள் கத்தியால் வெட்டி துண்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வரும் அர்ஜுன் என்ற மாணவர் இன்று பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். அப்போது அவரது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் அர்ஜூனிடம் தகராறு செய்து திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை தாக்கினர்.

இந்த தாக்குதலில் அர்ஜூன் விரல்கள் துண்டானதோடு, தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது., உடனடியாக அர்ஜூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் தலைமறைவான  கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.