1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (22:38 IST)

3 தொகுதிகளை திருப்பி கொடுத்தது ஏன்? சரத்குமார் விளக்கம்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் இன்று மாலை சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்
 
 சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வழங்கிய 40 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் கிடைக்காததால்3 தொகுதிகளை சரத்குமாருக்கு திருப்பிக் கொடுத்து விட்டதாக வதந்திகள் பரவியது
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்றும் அதனால் மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவருடைய கோரிக்கையை பரிசீலித்து மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுப்பதாகவும் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்