1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (19:16 IST)

சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல்: சரத்குமார், ராதிகா போட்டியில்லை!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் 40 தொகுதிகளை பெற்ற சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சற்றுமுன் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது/ மேலும் மூன்று தொகுதிகளை கமல்ஹாசனை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன
 
இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 37 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் சரத்குமார்-ராதிகா பெயர் இல்லை என்பது கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து இருவரும் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வேட்பாளர் பட்டியலில் முழுவடிவம் வெளிவந்தால் மட்டுமே இது குறித்து உறுதி செய்யப்படும்