ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (22:23 IST)

நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவா???

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் கோவை தெற்குத் தொகுதியில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

எனவே இன்று இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்தார்.

கமல்ஹாசன் ஒவ்வொரு பகுதிக்கு விரைந்து செல்வதற்காக தனி விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் சென்று வருகிறார். சமீபத்தில் சென்னையில் இருந்து விமானம் மூலம் காஞ்சிபுரம் சென்ற அவர் மீண்டும் ஹெலிகாப்டரிலேயே சென்னை வருகிறார்

இந்நிலையில் , கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கலின் போது தனது சொத்து மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், ரூ.176.93 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.45 கோடிக்கு  அசையும் சொத்து உள்ளதாவும், ரூ.132 கோடிக்கு அசையா சொத்து இருப்பதாகவும், ரூ.50 கோடி கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இன்று சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல விமானத்தை ஒப்பந்தம் செய்து அதில் புறப்பட்டுச் சென்றார்.