தொடர்புடைய செய்திகள்
- என்.டி.ஏ கூட்டணியில் அமமுக, தேமுக.. 23ஆம் தேதி கூட்டத்தில் பங்கேற்கும் தினகரன் - பிரேமலதா?
- விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை.. முடிவு செய்துவிட்டதா காங்கிரஸ்?
- சிலிண்டருக்கு ரூ.100 தர்றோம்னு திமுக சொல்லுச்சு.. ஆனால் சிலிண்டரையே மானியமா தர்றோம்ன்னு நாங்க சொன்னோம்: சி.வி.சண்முகம்
- சென்னையில் டெலிவரி ஊழியரை கத்தியால் குத்திய கும்பல்.. கஞ்சா போதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- கூட்டணிக்காக விஜயை மிரட்டுகிறார்கள்!.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...
ஓபிஎஸ் அணியில் இன்னொரு விக்கெட் காலி.. திமுக இணையவிருக்கும் முக்கிய புள்ளி..!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளும், கட்சித்தாவல்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின்' முக்கிய தூணாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான வைத்திலிங்கம், தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கத்தின் இந்த முடிவு ஓபிஎஸ் அணிக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
தஞ்சை மண்டலத்தில் அதிமுகவை நிலைநிறுத்தியவர்களில் ஒருவரான வைத்திலிங்கம் திமுகவிற்கு செல்வது, டெல்டா மாவட்டங்களில் அந்த கட்சிக்கு மேலும் பலத்தை சேர்க்கும். பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில், இந்த விக்கெட் வீழ்ச்சி ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edited by Siva
