செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (12:29 IST)

கஜா புயலால் பாதிக்கபட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 8.6 லட்சம் நிதியுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ. 8.6 லட்ச நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா புயல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த பலரும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 8.6 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 
கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வாடும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்குநிவாரண நிதியாக ரூ.5,000/- வீதம் மொத்தம் ரூ.8,60,000/- “தென்னிந்திய நடிகர் சங்கம்’’ மூலம் வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி சேவை புரியும், நிறுவனங்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்கம்” நன்றி தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.