1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (20:41 IST)

'பிணந்தின்னி திமுக' ... திமுகவுக்கு எதிராக ’ டுவிட்டரில் டிரெண்டிங்’

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ( 2 வயது). கடந்த 25 ஆம் தேதி, வீட்டில் அருகே இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். இதற்கு தமிழக அரசு அத்துணை பெரிய தீவிர முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல் இன்று அதிகாலை 2:  30 மணி அளவில் சுஜித் உயிரிழந்தான். இதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சுர்ஜித் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ,குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் இதற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் குழந்தைக்கு தனது அஞ்சலியை செலுத்தி கொண்டதுடன், அதிமுக அரசின் அலட்சியத்தால் குழந்தை இறந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். மீட்பு படையினரை அமைச்சர்கள் சுற்றி நின்று கொண்டு சரியாக செயல்படவிடாமல் செய்ததாகவும், ’80 மணி நேரம் மீட்பு பணி’ என்று அமைச்சர்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஒரு குழந்தையை காப்பாற்ற முடியாத அதிமுக அரசு எப்படி பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றும் என கேள்வியெழுப்பியுள்ளார். குழந்தை இறந்த சம்பவத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய முயல்கிறார் என வேறு சில கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், இறப்பில் கூட அரசியல் செய்வது திமுகவும், ஸ்டாலினும் தான் என தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த்  குற்றம்சாட்டியுள்ளார்.
 
அதில், குழந்தை மீட்பு நேரத்தில் குழந்தை பற்றியும் மரணத்தை பற்றியும் குறை சொல்வது தவறான விசயம் என்று தெரிவித்தார். 
ஆளுங்கட்சி செயல்களைப் பாராட்டுவதும், விமர்சிப்பதும்தான் எதிர்க்கட்சி என்றபோது. குழந்தையின் மரணத்தில் ஸ்டாலின் அரசியல் செய்வதாக சமூக வலைதளமான டுவிட்டரில் திமுகவுக்கு எதிராகப் ’பிணந்தின்னி திமுக’ என ஹேஸ்டேக் உருவாக்கி, அதில் திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து  டிரெண்டிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.