வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (19:08 IST)

ஊழியரை மிரட்டிய எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு தினகரன் கேள்வி

ttv dinakaran
எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் விதமாகவும், கம்பெனியை இழுத்து மூடி விடுவதாகவும், ஊழியர்களின் கை, கால்களை உடைத்தது விடுவதாகவும் தகராத வார்த்தைகளால் பேசிய  நிலையில்,  இதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தனியார் நிறுவன சி இ ஓ கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான  எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தது.

இந்தச் சம்பவத்திற்கு தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது. தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.