''உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது” - டிடிவி.தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது என்று பதிவிட்டு, பழைய நடைமுறைகள் தொடர வேண்டுமென போராடி வரும் ஸ்விகி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் உணவு விநியோக்கிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விகியில் இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்விகி நிறுவனம் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பழைய நடைமுறைகளே தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில்,. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது என ஸிசுகி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு Swiggy நிறுவனம் செவிசாய்க்கவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இப்பிரச்னையைத் தீர்த்து வைக்க தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்கள் பலர் தங்கள் படிப்புக்குரிய வேலை கிடைக்காததால் பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த உணவு விநியோக பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.