வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:53 IST)

விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாதது ஏன்? - திருமாவளவனே அளித்த விளக்கம்!

vijay thiruma

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதை அவர் நிராகரித்தது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

 

 

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலமாக கால் பதித்துள்ளார். விஜய் அரசியலில் நுழைந்த முதல் மாநாட்டிலேயே ‘கூட்டணியிலும் ஆட்சியிலும் பங்கு’ என்ற கருத்தோடு இறங்கியுள்ள நிலையில், அது திருமாவளவனுக்கு விடுக்கப்படும் ரகசிய அழைப்பா என்ற விவாதம் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 

 

ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக திருமாவளவன் கூறியிருந்த நிலையில், விஜய் - திருமா கூட்டணி அமையப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என திருமாவளவன் அறிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து திருமாவளவனே அளித்த விளக்கத்தில் “என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எப்படி நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K