செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2024 (09:28 IST)

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. விஜய் கலந்து கொள்வதால் திருமாவளவனின் அதிரடி முடிவு,..!

vijay thiruma
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடத்த இருக்கும் ’எல்லோருக்கும் மன தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்வார் என்பதால் திருமாவளவன் மற்றும் விஜய் ஒரே மேடையில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்றும் விஜய் கலந்து கொள்வதால் று கூட்டணியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டதால் நூல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற முடிவெடுத்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வழியாக உள்ளன.

இதனை அடுத்து ’எல்லோருக்கும் தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திருமாவளவன் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva