மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி.சி.க பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஆட்சியை தலித்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் முன்னதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மேலும் விசிகவுக்குள்ளேயே உள்கட்சி மோதல் எழுந்துள்ளதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் நடந்த விசிக நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “ஆதிக்க மனப்பான்மையை தூக்கி எறியக்கூடிய அரசியலை உருவாக்கி வருகிறோம். ஆணவப் படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வை கல்வி நிலையங்களில் உருவாக்க வேண்டும். பஞ்சமி நிலங்களுக்கான தரவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்
என்னுடைய சாதியை குறிப்பிட்டு சில ஊடகங்கள் பேசுகின்றன. என் சாதி என்னவென்று எனக்கே தெரியாது. கொள்கை அதிகாரக் கூட்டணி என்று பேசுகிறார்கள். தலித் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டுமே இங்கு ஆளப் பிறக்கவில்லை. எங்களுக்கான அரசியலை எங்களால் உருவாக்க முடியும். திருமாவின் கனவுகள் விரைவில் நிறைவேறும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K