1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:25 IST)

சசிகலா காரை மாற்றியது ஏன்? டிடிவி பதில்!!

காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கிறார். சசிகலா வந்துக்கொண்டிருக்கும் காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அதிமுக ஒன்றிய செயலாளரின் காரில் சசிகலா பயணித்தார். 
 
அமமுக தொண்டர்கள் யாரும் அதிமுக கொடியை பிடிக்க மாட்டார்கள். சின்னம்மாவை வரவேற்க வந்த அதிமுக தொண்டர்கள் தான் கொடி பிடித்துள்ளனர். சசிகலாவுக்கு அதிமுகவினரே வரவேற்பளித்து வருகின்றனர். சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவார்கள். 
 
அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும். காவல்துறை நடுநிலையுடன் செயல்படாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். காவல்துறை நடுநிலை தவறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என கூறினார்.