கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டுதற்கொலை ஏன்? அதிர்ச்சி தகவல்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.
நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து விஜயகுமார் கொண்டார் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர் கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
Edited by Siva