வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (20:22 IST)

பிரபல பாப் பாடகி கோகோ லீ உயிரிழப்பு….ரசிகர்கள் அதிர்ச்சி

Coco Lee
பிரபல பாப் பாடகி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஹாங்காங் நாட்டில் பிறந்தவர் கோக்கோ லீ(48). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு தன் குடும்பத்தினருடன் குடிபெயந்தார்.

அங்கு தன் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின்னர், மீண்டும் ஹாங்காங்கிற்கு அவர் சென்றிருந்தார். அப்போது, அவர் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் பாடினார். அதில் முதல் பரிசை பெற்ற பின், அவர் இசையை நோக்கி தன் கவனம் குவித்தார்.

பின்னர், 90 களில் அவர் பாடல்கள் மத்தியில் பிரபலமமானது.  தன் பாடல்களுக்காக ஆஸ்கர் விருது வரை சென்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு அவர் முயற்சித்த நிலையில்  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கோமா நிலைக்குச்  சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பால் இசைக் கலைஞர்களும், ரசிகர்களும் இரங்கல் கூறி வருகின்றனர் .