பிரேமலதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.. அதிமுக கூட்டணிக்கு மறைமுக அழைப்பா?
தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நேற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஏற்கனவே நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக தனித்தனி கூட்டணிகளில் போட்டியிட இருக்கும் நிலையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இழுக்க இரு கட்சிகளும் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருடைய தலைமையில் அக்காட்சி பின்னடையில் இருந்து மீண்டுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் தேமுதிக தொண்டர்கள் தற்போது உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva