1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Who spread the CM Jayalalithaa's health status

ஜெ. உடல்நிலை தகவல்: கசிய விட்ட மருத்துவர்கள்?

ஜெ. உடல்நிலை தகவல்: கசிய விட்ட மருத்துவர்கள்?

ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது பல தகவல்களும் , வதந்திகளும் பரவி வருகின்றன.


 
 
முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது, இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார், இவை தான் அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்தினால் அறிவிக்கப்படும் தகவல். ஆனால் மருத்துவமனையில் என்ன நடக்கிறது, அவரது உடல் நிலை தற்போது என்ன நிலையில் உள்ளது போன்ற தகவல்கள் கசிந்து செய்திகளில் வந்துகொண்டு தான் உள்ளது.
 
இந்த தகவல்கள் எப்படி கசிகிறது, யார் கசியவிடுகிறது போன்ற சந்தேகங்கள் இருந்து வந்தன. அப்பல்லோவில் உள்ள மருத்துவர்கள் இந்த தகவலை சக மருத்துவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிப்பது மூலம் கசிவதாக கூறப்படுகிறது.
 
கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை முதல்வரின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது. அப்போது பணியில் இருந்த மூன்று மருத்துவர்கள் மூலமாக தான் இந்த கசிய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. தற்போது வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மருத்துவர்கள் தான் முதல்வருக்கு சிகிச்சையளிக்க உள்ளார்களாம். அதனால் அப்பல்லோ மருத்துவர்கள் சிலர் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: திமுகவை சீறும் சி.ஆர்.சரஸ்வதி!