1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (07:19 IST)

பிரதமர் மோடியின் மிகச்சிறந்த அடிமை பதவிக்கு மூன்று பேர் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் மோடியின் மிகச் சிறந்த அடிமை யார் என்பதில் மூன்று பேர்களுக்கு போட்டி இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து  யார் போவார்கள் என்ற கேள்விக்கு பதில் பிரதமர் மோடியின் அடிமையாக இருப்பதால் இபிஎஸ் இந்த கூட்டத்துக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.
 
மேலும் பிரதமர் மோடியின் சிறந்த அடிமை யார் என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவருக்குள் போட்டி நடக்கிறது என்று அதில் ஈபிஎஸ், வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ’இந்தியா’ கூட்டணியை பார்த்து பாஜகவினர் மிகுந்த பயத்தில் உள்ளனர் என்றும் கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva