புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (10:08 IST)

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் ? – குடும்பத்துக்குள்ளேயே போட்டி !

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மற்றும் அவரின் தம்பி மகன் விஜய் வசந்த் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திமுக தலைவர்கள், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தொகுதிகள் குறித்து பேசினர். இதில் திமுக - விக்கிரவாண்டி மற்றும் புதுவையிலுள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் - நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் நாங்குநேரி தொகுதிக்கான காங்கிர்ஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரது தம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இல்லாமல், இளைஞர் அணி பொறுப்பில் உள்ள அமிர்தராஜ் மற்றும் ரூபி மனோகரன்.ஆகியோரும் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.