1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (18:55 IST)

யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை? அரசின் விளக்க அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சற்று முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 6 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்பது குறித்த விவரங்கள் விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகியவர்களுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் முறைகேடான முறையில் நகை கடன் தள்ளுபடி பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது